test

அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணம் கொண்டு வந்தாரா? தேர்தல் ஆணையம் பதில் என்ன?

 

அண்ணாமலை, பாஜக, கர்நாடகா

பட மூலாதாரம்,TWITTER/ANNAMALAI_K

படக்குறிப்பு,

கர்நாடகாவில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுப்பட்டுள்ள அண்ணாமலை

கர்நாடக மாநிலத்தின் உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்த பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, அதே ஹெலிகாப்டரில் பெருமளவு பணத்தையும் எடுத்துவந்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை அண்ணாமலை மறுத்துள்ளார்.

அண்ணாமலை, பாஜக, கர்நாடகா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மாதிரி படம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கவுப் தொகுதியில் போட்டியிடுகிறார் வினய் குமார் சொரகே. உடுப்பி காங்கிரஸ் பவனில் திங்கட்கிழமையன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வினய் குமார் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

உடுப்பி மாவட்ட பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான அண்ணாமலை கவுப்பிற்கு ஹெலிகாப்டரில் வந்தபோது தன்னுடன் பெருமளவு பணத்தைக் கொண்டுவந்ததாகக் குற்றம்சாட்டினார்.

"எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அதில் (ஹெலிகாப்டரில்) பண மூட்டைகள் இருந்தன. மாவட்ட அதிகாரிகளுக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தெரிவித்தேன். மாவட்ட அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்," என்றார் வினய் குமார்

No comments:

Powered by Blogger.